Nomination Launch Interview – Vasantham, Medicorp
5 May 2017 • 2 mins read, 2.30 mins video
Share
மனிதநேயமிக்கவர்களை அங்கீகரிக்க விருது நிகழ்ச்சி
பிறரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் எனக் கருதும் மனிதநேயமிக்கவர்களை அங்கீகரிக்க விருது நிகழ்ச்சி ஒன்று நடக்கவுள்ளது. ஆர்ப்பாட்டமில்லாமல் சமூகத்தில் தேவையுடையோருக்கு உதவி செய்வோரைப் பொதுமக்களே விருதுக்கு முன்மொழியலாம்.
Hillview Civilians விளையாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது விருது நிகழ்ச்சி.
இதுவரை 20க்கும் அதிமானோர் விருதுகளைப் பெற்றுள்ளனர். தொண்டூழியம் செய்வோரைக் கௌரவிக்க வேண்டும்;
அதன் மூலம் இன்னும் அதிகமானோர் தொண்டூழியம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். இதுவே ஏற்பாட்டுக் குழுவினரின் நோக்கம்.
சென்ற ஆண்டு மூத்த தொண்டூழியர்களுக்கான பிரிவில் விருதை வென்றார் திருவாட்டி ஜெயமணி. சங்கங்கள், வழிபாட்டு நிலையங்கள் உட்படப் பல இடங்களில் தொண்டூழியம் செய்துவருகிறார் திருவாட்டி ஜெயமணி. ஒற்றைப் பெற்றோர், வயதானோர் பதின்ம வயதினர் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் இவர் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். திருவாட்டி. ஜெயமணி போன்ற பலரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
விருதுக்காக நீங்கள் அவர்களை முன்மொழியலாம்.
விருதுக்குரியவர்களை sgsilentheroes.com இணையத் தளத்தில் இன்று முதல் பரிந்துரைக்கலாம்.
அவர்களை முன்மொழிவோர் தங்களைப் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
வரும் செப்டம்பர் 17ஆம் தேதி விருது நிகழ்ச்சி நடைபெறும்.
Award Ceremony to recognize the Humanities
Publication
Published originally from: Vasantham: Seithi, Mediacorp
https://seithi.mediacorp.sg/mobilet/singapore/6may-silent-heroes/3709002.html
#singaporesilentheroes #ssh #silentheroes #nomination #launch #publications #media #video #vasantham #mediacorp #interview #2017 #2k17
Share
Comment
Follow us
Recent Events
Category
2024 Singapore
Silent Heroes
Coming Soon
About
Silent Heroes
SSH Student Award
Recognising humanity with an award that expresses gratitude of our society for their kindness towards fellow individuals, families, community and environment. Through this award, we look forward to inspiring more to become Silent Heroes. Someday soon, everyone shall be a Silent Hero, not only in Singapore but globally.